'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இசை மற்றும் நடனத்தை மையமாக கொண்ட படங்களுக்கான சர்வதே திரைப்பட விழா கான்சோனன்ஸ் திரைப்பட விழாவாகும். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வருகிற 28 மற்றும் 29ந் தேதிகளில் நடக்கிறது. இந்த பிரிவில் நடக்கும் முதல் உலக திரைப்பட விழா இதுவாகும். இதில் திரையிட உலகம் முழுவதிலுமிருந்து 22 படங்கள் தேர்வாகி உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மானின் ஒன் ஹார்ட் என்ற படம் தேர்வாகி உள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் இசை சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது அதன் தொகுப்பை ஏ.ஆர்.ரஹ்மானின் நேர்காணலுடன் ஒரு திரைப்படமாக தொகுத்திருந்தனர். இந்தப் படம் தமிழ் நாட்டில் வெளியானது. ஆனால் போதிய வரவேற்பை பெறவில்லை. தற்போது இந்த பட விழாவுக்கு தேர்வாகி உள்ளது. ஏதாவது ஒரு விருதை கட்டாயம் பெறும் என்கிறார்கள்.