பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.. இந்தநிலையில் அஜித் படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அஜித்தை சந்தித்துள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்..
தமிழில் யூகன், அதியன் என சின்னச்சின்ன படங்களில் நடித்திருந்தாலும் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பரவலாக அறிமுகமானவர் தான் இந்த சாக்ஷி அகர்வால்.
ஒரு ரசிகையாக அஜித்தை சந்தித்தது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சாக்ஷி அகர்வால், "அஜித்திடம் கிடைத்த ஆசீர்வாதங்கள் என் வாழ்நாள் முழுதும் சந்தோசம் தரக்கூடிய ஒன்று.. பேராண்மைக்கு உதாரணம் என்றால் அஜித் தான்" என பரவசத்துடன் கூறியுள்ளார்.