ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த 2016ல் மலையாளத்தில் வெளியான படம் பிரேதம். ரஞ்சித் ஷங்கர் டைரக்சனில் வெளியான இந்தப்படத்தில் ஜான் டான்பாஸ்கோ.என்கிற ஹிப்னாடிச மருத்துவராக நடித்திருந்தார் ஜெயசூர்யா. மர்மங்கள் நிறைந்த அவரது கேரக்டரை இன்னும் வலுப்படுத்தும் விதமாக இந்தப்படத்திற்காக மொட்டை கூட அடித்திருந்தார் ஜெயசூர்யா.
அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை பிரேதம்-2 என்கிற பெயரில் எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார் இயக்குனர் ரஞ்சித் ஷங்கர் ஜெயசூர்யாவை தவிர இந்த இரண்டாம் பாகத்தில் நடிப்பவர்கள் அனைவரும் புதிய ஆட்கள் தான்.
இந்நிலையில் தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கியுள்ளது. இந்தப்படத்திற்காக மீண்டும் ஜெயசூர்யா மொட்டை அடிப்பார் என சொல்லப்பட்ட நிலையில், முதல்நாள் படப்பிடிப்பிலேயே மொட்டைத்தலையுடன் கலந்துகொண்டார் நடிகர் ஜெயசூர்யா.