தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமூகவலைதளங்களில் கடந்த ஒருவாரமாக டிரண்ட்டான பாடல் "சின்ன மச்சான் செவத்த மச்சான்". பிரபுதேவா நடிக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தின் பாடல் இது. இதனை பிரபல நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி பாடியுள்ளனர். இந்தப் பாடல் இவர்கள் டி.வி போட்டியில் பாடிய பாடல். இந்தப் பாடலை தாம் தயாரிக்கும் படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் டி.சிவா அதன் உரிமத்தை கையோடு வாங்கி விட்டார்.
அந்த பாடலை தற்போது தான் தயாரிக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். இசை அமைப்பாளர் அம்ரேஷ். அதனை இன்னும் மெருகேற்றி இருவரையும் பாட வைத்திருக்கிறார். கடந்த 13ம் தேதி இப்பாடல் லிரீக் மற்றும் மேக்கிங் வடிவாக வெளியிடப்பட்டது. ஒருவாரத்தில் இதுவரை 61 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் டி.சிவா கூறியதாவது:இந்த பாடல் விஜய் டிவியில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியால் பாடப்பட்ட போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்று அவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்து விட்டேன். அதற்கு பிறகு தான் அந்த பாடலுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்தப் பாடலை சார்லி சாப்ளின் 2 படத்திற்காக அம்ரேஷ் இசையில் உபயோகப்படுத்திக் கொண்டோம்.
இசை அமைப்பாளர் அம்ரேஷ் கூறியதாவது : இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சிவா, இயக்குனர் ஷக்தி சிதம்பரம், பிரபுதேவா ஆகியோருக்கும், இந்த பாடலை டுவிட் மூலம் மேலும் பிரபலமாக்கிய தனுஷ்க்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரபுதேவா, எவ்வளவோ டியூனுக்கு வித விதமான டான்ஸ் ஆடி இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். சின்ன மச்சான் பாடல் மூலம் அவர் ஆடி நான் வெற்றி பெற்றிருக்கிறேன்.
எனக்கான ஒரு இடம் சினிமாவில் ராகவா லாரன்ஸ் மூலம் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் மூலமாகவும், பிரபுதேவா மூலம் சார்லி சாப்ளின் 2 மூலமும் கிடைத்திருக்கிறது எனும் போது பெருமையாக இருக்கிறது. மிகப் பெரிய இசையமைப்பாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எனக்கும் ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷமே. அடுத்து சார்லி சாப்ளின் 2 படத்தில் இன்னும் 4 பாடல்கள் இருக்கு. அதுவும் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும் என்று நம்பறேன். என்றார்.