தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் வாய்ப்புகள் அமைவதும், வெற்றிகள் அமைவதும் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது என்பார்கள். ஒரு சிலர்தான் அதிர்ஷ்டத்தை மீறி வெற்றி பெறுவார்கள். சிலருக்கு வெற்றிகள் கொடுத்தாலும் அதிர்ஷ்டம் தொடர்ச்சியாக கை கொடுக்காது. அந்த வரிசையில் லட்சுமி மேனன் சேர்ந்துவிட்டார் என்பதுதான் ஆச்சரியம்.
'சுந்தரபாண்டியன், கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப் பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன்' என பல வெற்றிப் படங்களின் நாயகியாக நடித்து பரபரப்பாகப் பேசப்பட்டார். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அவர் நடித்த படம் எதுவும் வெளிவரவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று.
பிரபுதேவா ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து வரும் 'யங் மங் சங்' படம் எப்போது வெளிவரும் என்று தெரியவில்லை. அதற்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட படங்கள் கூட வெளிவரத் தொடங்கிவிட்டன. தமிழில் தான் நடித்த 11 படங்களில் 9 வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் லட்சமி மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.