டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பவன் கல்யாண் நடிப்பில் 2013-ம் ஆண்டு ரிலீஸான தெலுங்குப் படம் 'அத்தரண்டிகி தாரேதி'. சமந்தா, பிரணிதா இருவரும் கதாநாயகிகளாக நடித்த இந்தப் படத்தில் நதியாவுக்கு பிரதான வேடம். பவன்கல்யாணின் அத்தையாக நடித்திருந்தார், மற்றும் பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.
சுந்தர். சி இயக்க, சிம்பு ஹீரோவாக நடிக்க இந்தப் படத்தை, தமிழில் ரீமேக் செய்கிறார்கள். சமந்தா நடித்த வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரணிதா வேடத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
நதியா நடித்த ஹீரோவின் அத்தை வேடத்தில் குஷ்பூ நடிப்பதாக தகவல் வெளியானது. உண்மையில் அந்த வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நேற்று ஜார்ஜியாவில் தொடங்கியது. வரும் 27 ஆம் தேதி வரை அங்கே படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஒரு பாடல்காட்சியும், சேஸிங் காட்சியும் படமாக்கப்படவிருக்கிறது.