சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் |
தமிழ்த் திரையுலகத்தின் தற்போதைய இயக்குனர்களில் முக்கியமான ஒரு இயக்குனராக, கிரியேட்டராக பார்க்கப்படுபவர் பாலா. அவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அவருடைய படங்களின் கதையும், கதாபாத்திரங்களும் பேசப்பட்டவையாக அமைந்துள்ளன.
இதுவரை ரீமேக் படங்களை இயக்காத பாலா, அவருடைய முதல் பட ஹீரோவான விக்ரம் வேண்டுகோளின்படி தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்க சம்மதம் தந்தார். 'வர்மா' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் நேபாளத்தில் ஆரம்பமானது. அதன்பின் திரையுலக ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது. அதன்பின் ஆரம்பமான படப்பிடிப்பு நான்கு மாதங்களுக்குள் முடிவடைந்துள்ளது.
பாலா என்றாலே படத்தை மிகவும் தாமதமாக நீண்ட நாட்கள் இயக்குபவர் என்ற பேச்சு பல வருடங்களாகவே இருக்கிறது. இதற்கு முன் பாலா இயக்கிய 'நாச்சியார்' படத்தை விரைந்து முடித்தார். அது போலவே தற்போது 'வர்மா' படத்தையும் விரைந்து முடித்து பாலாவா இது என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
வரும் சனிக்கிழமை 22ம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு வேலூரில் நடைபெற உள்ளது.