ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் 'ஏழாம் அறிவு' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், இந்த ஆண்டில் அவர் நடித்து இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை. கடந்த ஆண்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தலா ஒரு படங்களில் நடித்திருந்தார்.
ஸ்ருதிஹாசனுக்கும், லண்டனைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் காதல் என்ற பேச்சும் ஸ்ருதிக்கு பட வாய்ப்புகள் குறைந்ததற்குக் காரணமாக இருக்கலாம். இசையில் நல்ல திறமை கொண்ட ஸ்ருதி, கமல்ஹாசன் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சில ஹிட் பாடல்களையும் பாடியிருக்கிறார்.
சமீபத்தில் லண்டனில் உள்ள என்இடி ஹோட்டலில் 'நியூ மியுசிக் மன்டே' என்ற அவருடைய இசைக் குழுவினர் வழங்கிய இசை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். வளரும் திறமைசாலிகள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி அது. இது போன்று இன்னும் பல இசை நிகழ்ச்சிகளை விரும்புவதாக ஸ்ருதி கூறியுள்ளார். நடிக்கும் வாய்ப்பு குறைந்திருப்பதால் ஸ்ருதிஹாசன் இனி இசையில் அதிக ஆர்வம் செலுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.