மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அத்தாரின்டிக்கி தாரேதி படம், தமிழில் ரீ-மேக் ஆகிறது. சுந்தர்.சி இயக்க, சிம்பு - மேகா ஆகாஷ் நடிக்கிறார்கள். அடுத்தாண்டு, ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியிருக்கிறது.
சிம்பு புதிய தோற்றத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பில் அவரின் ஸ்டைலான தோற்றம், சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட பிரச்னைக்குப் பிறகு சிம்புவை வைத்து இனிமேல் படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் ரிலீஸாக உள்ள நிலையில், அடுத்தப்படியாக மாநாடு, கார்த்திக் நரேனின் படம், சுந்தர்.சி படம் பிஸியாகி உள்ளார்.