பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
எல்லா மொழிகளிலும் ரீமேக்காகும் விதமாக எப்போதாவது ஒரு சென்சேஷனல் ஹிட் படம் ஒன்று வெளியாவதும் அதை மற்ற மொழிகளில் ரீமேக்கிற்காக அள்ளிக்கொண்டு போவதும் வழக்கமான ஒன்று தான். அந்த பட்டியலில் தற்போதையை இடத்தில் இருப்பது தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம் தான்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா எனும் சாதாரண நடிகரை ஒரே படத்தில் உச்சிக்கு ஏற்றிவிட்டது. அதனால் தான் தமிழில் நடிகர் விக்ரமே தனது மகன் துருவ்வை இந்த கதையில் அறிமுகப்படுத்தும்படி பாலாவிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். ஹிந்தி ரீமேக்கில் சாகித் கபூர் இந்த கேரக்டரில் நடிக்கிறார்.
இந்தநிலையில் இந்தப்படத்தின் மலையாள ரீமேக் ரைட்ஸை E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப்படத்தில் அர்ஜுன் ரெட்டி கேரக்டரில் நடிக்க, மோகன்லாலின் மகன் பிரணவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.