Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீமராஜாவை எதிர்க்கும் விஜய், அஜித் ரசிகர்கள் ?

17 செப், 2018 - 18:17 IST
எழுத்தின் அளவு:
Ajith,-Vijay-fans-oppose-Seemaraja?

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அடுத்து விஜய், அஜித் ஆகிய இருவரும் தான் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்கள். விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்து கமர்ஷியல் ரீதியாக எந்த நடிகர் 'பாக்ஸ் ஆபீஸ் பாப்புலர்' என்பதில் பலத்த போட்டி இருக்கிறது.

விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்த நிலையில் சிம்பு, தனுஷ் எனச் சொல்லலாம் என்ற ஒரு சூழல் சில வருடங்களுக்கு முன்பு உருவானது. ஆனால், தவறான படங்களால் அவர்கள் அதற்கான இடத்தை இழந்துவிட்டனர். இனி, அவர்கள் நடித்து வரும் படங்கள்தான் அவற்றை முடிவு செய்யும்.

இதனிடையே, பாக்ஸ் ஆபிசில் சிவகார்த்திகேயன் வேகமாக வளர்ந்து வருகிறார் என்று சொல்லப்பட்டது. அவர் நடித்து கடந்த வாரம் வெளியான 'சீமராஜா' படம் பெரிய வசூலைப் பெற்றால் விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்து சிவகார்த்திகேயனும் அந்த இடத்திற்கான போட்டியில் இடம் பெறலாம் என்றார்கள்.

அதனாலேயே, விஜய், அஜித் ரசிகர்கள் 'சீமராஜா' படத்திற்கு எதிராக கடந்த சில தினங்களாக பல்வேறு விதமான மீம்ஸ்களை சமூக வலைத்தளங்களில் உலவ விட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த மீம்ஸ்கள் வைரலாகப் பரவி வருகிறது. இருப்பினும், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்' ஆகிய படங்கள் அளவிற்கு பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணி 'சீமராஜா' படத்தில் திருப்திப்படுத்தவில்லை என்ற நடுநிலை விமர்சனம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
வங்கியை கொள்ளையடிக்கும் சிம்பான்ஸிவங்கியை கொள்ளையடிக்கும் சிம்பான்ஸி 10 கோடி பெற்ற சமந்தா 10 கோடி பெற்ற சமந்தா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Kumar Enter - Tamil,இந்தியா
24 செப், 2018 - 19:26 Report Abuse
Kumar Enter சூர்யா & விக்ரம் எங்கட கடந்த 10 படங்களை காம்பரே பண்ணுங்க
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
24 செப், 2018 - 10:38 Report Abuse
 nicolethomson சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23 செப், 2018 - 05:20 Report Abuse
J.V. Iyer அஜித், விஜய்க்கு அப்புறம், விஜய் சேதுபதி, சிவர்கார்த்திகேயன் தான். இதிலென்ன சந்தேகம்?
Rate this:
18 செப், 2018 - 12:54 Report Abuse
suraGopalan விஜய்க்கு வயிற்றை கலக்கும்
Rate this:
18 செப், 2018 - 11:20 Report Abuse
pradeep.pitchai@gmail.com neruppuda
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    Tamil New Film Ispet rajavum idhaya raniyum
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in