அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
2015-ஆம் ஆண்டு ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அடல்ட் காமெடிப் படமான இதில் ஆனந்தி, மனிஷா யாதவ் கதாநாயகிகளாக நடிக்க, சிம்ரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.
ஆர்யா, பிரியா ஆனந்த் ஆகியோரும் கெஸ்ட் ரோலில் தலையைக்காட்டினர். இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பிய இந்தப் படத்துக்கு, பலத்த எதிர்ப்பு கிளம்ப, அதுவே படத்துக்கு விளம்பரமாகி, 'த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா' படம் வசூலை அள்ளியது. அதன் பிறகு சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இந்நிலையில், மூன்று வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி 'காதலை தேடி நித்யா நந்தா' என்ற படத்தில் மறுபடியும் இணைகிறது. அனேகன் பட நாயகியான அமைரா தஸ்தூர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், சோனியா அகர்வால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளனர். படத்தின் முன்பாதி சாதாரண படமாகவும், பின்பாதி 3டி தொழில்நுட்பத்திலும் தயாராகிறது. தமிழ்சினிமாவில் புதிய முயற்சியாக இப்படம் பேசப்படும் என்கிறார்கள்.