ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விக்ரம் பிரபு நடிப்பில் 60வயது மாநிறம் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, மீண்டும் விக்ரம் பிரபு நடிப்பில் தயாரித்துள்ள படம் துப்பாக்கி முனை. ஹன்சிகா ஹீரோயின். வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் செல்வராஜ் இயக்கி உள்ளார். ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார், எல்.வி.முத்துகணேஷ் இசை அமைத்துள்ளார். படத்தின் பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி விட்டது.இதில் விக்ரம் பிரபு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார். ஒரு தவறான என்கவுன்டரால் ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டு விட அந்த குடும்பத்துக்காக விக்ரம் பிரபு என்ன பிரதிபலன் செய்தார் என்பது தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
விக்ரம் பிரபு நடித்த படங்களிலேயே இதுதான் பக்கா ஆக்சன் படம். ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு போலீஸ் படம் ஸ்பெஷலாக இருக்கும். அந்த வரிசையில் விக்ரம் பிரபுவுக்கு இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள்.
இதனிடையே, துப்பாக்கி முனை படத்தின் டீசர், மணிரத்னத்திடம் காண்பிக்கப்பட்டது. டீசரை பார்த்தவர் படக்குழுவினர் வெகுவாக பாராட்டினார்.