ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் படம் 'சர்கார்'. இந்தப் படத்தின் படபிடிப்பு சமீபத்தில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடந்து முடிந்தது. அதில், சுந்தர் பிச்சை கேரக்டர் போன்றதொரு கேரக்டரில் நடித்திருக்கும் விஜய்யின் ஓட்டை, வேறொருவர் கள்ள ஓட்டாக போட்டது தெரிந்து, தமிழகம் வரும் விஜய், இங்கு தீவிர அரசியலில் தனியொருவராக களம் இறங்கி, பெரும் படையைத் திரட்டுகிறார்.
அவர் அரசியலில் பிரபலமாகி வரும் சூழலில், பல்வேறு சர்ச்சைகளும் அவரை வரிசை கட்டுகின்றன. அந்த சந்தர்ப்பத்தில் டி.வி., விவாதப் பொருளாகவும் விஜய் குறித்த சர்ச்சை எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்படுகிறது.
விஜய் குறித்த சர்ச்சைகள் தாறுமாறாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, விவாத அரங்க மேடைக்குள் நேரடியாக நுழைகிறார் விஜய். தன் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் விளக்கமாக பதில் அளித்து, சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார்.
இந்த விவாத நிகழ்ச்சி, பிரபல நியூஸில் ஒளிபரப்பாகும் விவாத அரங்க நிகழ்ச்சி போலவே படமாக்கப்பட்டிருக்கிறது. இது, ஒரிஜினல் நிகழ்ச்சி போலவே படமாக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என தயாரிப்புத் தரப்பினர் கூறுகின்றனர்.