இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ஹாலிவுட்டின் அடுத்த எதிர்பார்ப்பு வெனம். மார்வெல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கொலம்பியா பிக்சர்சும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை ரூபன் பெலிச்சர் இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சோம்பிலேண்ட், 30 மினிட்ஸ் லெஸ், கேங்ஸ்டர்ஸ்வாட், டூ நைட் ஸ்டேண்ட், படங்களை இயக்கியவர். லெஜண்ட், லண்டன் ரோட், ஸ்டார் வார்ஸ் படங்களில் நடித்த டாம் ஹார்டி ஹீரோ. அவருடன் மைக்கேல் வில்லியம்ஸ், ரிஸ் அகமட் ஆகியோர் நடித்துள்ளனர். லுட்வின் கிரான்சன்ஸ் இசை அமைத்துள்ளார், மேத்யூ லிபட்டிக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அரசு எதிரான செய்திகளை சேகரித்து வெளியிடும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் உடலுக்குள் ஏலியன்ஸ் மாதிரியா ஒரு வெளிகிரக உயிரினம் புகுந்து கொண்டு அட்டகாசம் செய்வதும். அந்த உயிரினத்திடமிருந்த பத்திரிகையாளரை காப்பாற்றுவதும் படத்தின் கதை. நவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் 5ந் தேதி வெளியாகிறது. தமிழுடன் இந்தி, தெலுங்கிலும் வெளிவருகிறது. 3டி மற்றம் ஐநாக்ஸ் 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் எஸ்.பி.ஈ பிலிம்ஸ் இண்டியா நிறுவனம் வெளியிடுகிறது.