ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சினிமாவில் இருபது வருடங்களுக்கு மேல் காமெடி நடிகராகவும் சமீப வருடங்களாக ஒரு குணச்சித்திர நடிகராகவும் வலம்வரும் நடிகர் தான் சலீம்குமார். கடந்த சில வருடங்களாக இயக்குனராகவும் மாறியுள்ள சலீம்குமார் ஆதாமிண்டே அபு படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதும் பெற்றவர்.
இடையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட சலீம்குமார் கடந்த இரண்டு வருடங்களாக பார்முக்கு திரும்பி பரபரப்பாக நடித்து வருகிறார். தற்போது மம்முட்டியுடன் மதுரராஜா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவரும் சலீம்குமார் இன்று 50வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்த தகவலை அறிந்த மம்முட்டியும் இயக்குனர் வைசாக்கும் சலீம்குமாரின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.