இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தில் பழ.கருப்பையாவின் மகளாக நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார். சர்கார் படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகி இல்லை. முக்கிய வேடத்தில் தான் நடிக்கிறார்.
அதேப்போல் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'மாரி-2' படத்திலும் கூட முக்கியமான வேடத்தில் தான் நடிக்கிறார் வரலட்சுமி சரத்குமார். மாரி-2' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
தான் நடிக்கும் ஒவ்வொரு படம் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் டுவிட்டரில் தெரிவிக்கிறார் வரலட்சுமி சரத்குமார். கடந்த வாரம் 'சர்கார்' படத்திற்காக டப்பிங் வேலைகளை முடித்து விட்டதாக அறிவித்திருந்தார்.
இப்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் நடித்துள்ள 'மாரி-2' படத்திற்கான டப்பிங் வேலைகளை முடித்துவிட்ட தகவலையும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
'சர்கார்' படம் தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கிறுது. 'மாரி-2' டிசம்பர் 21-ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.