ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாஸை தமிழில் அறிமுகம் செய்ய ஆசைப்பட்டு, ஒரு பக்க கதை என்ற படத்தில் நடிக்க வைத்தார். விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் அந்த படத்தை இயக்கினார். காளிதாஸின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் தான் அவரை மீடியாக்களுக்கு அறிமுகம் செய்தார். அப்படி காளிதாஸ் நடித்த முதல் படமான ஒரு பக்க கதை பல ஆண்டுகளாகியும் இன்னும் திரைக்கு வரவில்லை.
அதன்பிறகு காளிதாஸ் நடித்த மீன்குழம்பும் மண்பானையும் என்ற படம் வெளியானது. அதையடுத்து தமிழில் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் இல்லாததால் தற்போது மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன், ஜீத்து ஜோசப் உள்ளிட்ட சில முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்கிறார். அடுத்தப்படியாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கும் படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அந்த வகையில், மலையாளத்தில் தற்போது ஐந்து படங்களில் நடித்து வருகிறார் காளிதாஸ்.