ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகுபலி படத்தில், அவந்திகாவாக நடித்து அசத்திய தமன்னா, மீண்டும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க துவங்கி விட்டார். 'பாகுபலி போன்ற, மெகா ஹிட் படங்களில் நடித்த நீங்கள், மீண்டும் கவர்ச்சி எல்லைக்குள் சிக்குவது நியாயமா' என, கேட்டால், புன்னகைக்கிறார்.
'சினிமா என்றால், எல்லா விதமான கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும். இப்போது கூட, தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும், நரசிம்ம ரெட்டி என்ற, வரலாற்று கதையை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடித்து வருகிறேன்' என்கிறார், தமன்னா.
'என்னை பார்க்கும் எல்லாருமே, பாகுபலி மூன்றாம் பாகம் எப்போது வரும் எனக் கேட்கின்றனர். ஆனால், பாகுபலி மூன்றாம் பாகம் இல்லை என, இயக்குனர், ஏற்கனவே கூறி விட்டார். எனவே, மூன்றாம் பாகத்தை எதிர்பார்த்து, யாரும் ஏமாற வேண்டாம்' என்கிறார், அவர்.