'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த ஆண்டு டாப்ஸி நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த படம் ஆனன்டோ பிரம்மா. டாப்ஸியுடன் வெண்ணிலா கிஷோர், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ராஜீக் கன்னகலா உள்பட பலர் நடித்திருந்தார்கள். கே இசை அமைத்திருந்தார், அனிஷ் தருண் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். மகி வி.ராகவ் இயக்கி இருந்தார். 70எம்எம் என்டர்டெயின்ட்மென்ட்ஸ் சார்பில் விஜய் சில்லா, சாக்ஷிதேவி ரெட்டி தயாரித்திருந்தார்கள்.
இது காமெடி கலந்த பேய் படம். ஒரு வீட்டுக்கு புதிதாக குடிபோகும் டாப்ஸியின் குடும்பத்தை அந்த வீட்டில் உள்ள பேய் என்ன பாடுபடுத்துகிறது என்பது கதை. இதில் பேயாகவும் டாஸ்சியே நடித்திருந்தார். இப்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார். நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.