Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2.0 டீசர் சொல்வது என்ன? : ஒரு பார்வை

14 செப், 2018 - 12:33 IST
எழுத்தின் அளவு:
What-2.0-Teaser-telling?

ரஜினி, எமி ஜாக்சன், அக்சய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கி உள்ள பிரம்மாண்ட படம் 2.0. முன்பு அவர் இயக்கிய எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம். ரூ.545 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் உள்ள இந்தப்படம் நவ., 29-ம் தேதி வெளிவர இருக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இதன் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அது பற்றிய ஒரு பார்வை...

டிரைலரின் ஆரம்பத்தில் டைட்டில் கார்ட் முடிந்தவுடன் சிட்டுகுருவிகள் செல்போன் கோபுரத்தை சுற்றி பறக்கின்றன. பின்னர் மக்கள் கையில் வைத்திருக்கும் செல்போன்கள் மாயமாகிறது. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் நடப்பதாகவும், இதுகுறித்து போலீசார் குழப்பத்தில் இருப்பதாகவும் டெலிவிஷனில் செய்தி சொல்கிறார்கள்.


உடனே விஞ்ஞானிகள் அவசரமாக கூடி இது என்ன? இதற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்புகின்றனர். அப்போது டாக்டர் வசீகரனான ரஜினிகாந்த், “இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது. இதை எதிர்த்து நிற்க ஒரு 'சூப்பர் பவர்' வேணும்” என்கிறார். “அப்போ என்ன பண்ணலாம்கிறீங்க” என்று மற்றவர்கள் கேட்டதும் உடனே “சிட்டி த ரோபோட்" என ரஜினி சொல்ல சிட்டி ரோபோ அறிமுகம் செய்யப்படுகிறது.


ராட்சத கழுகின் தோற்றத்தில் கட்டடங்களை உடைத்து திகிலூட்டும் அக்சய் குமார் நிழல் நிலத்தில் விழும்போது சிட்டி ரோபோ அதை அண்ணாந்து பார்த்தவாறு அதிரடியில் இறங்குகிறார். கால்பந்தாட்ட மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரோபோக்கள் வருகின்றன. அவை அனைத்தும் செல்போன்களால் உருவானவை. அப்போது சிட்டி கையில் நூறு துப்பாக்கிகளை வைத்து ஸ்டைலாக சுடுகிறார். இறுதியில் ரோபோ ரஜினி 'குக்கூ' என்று கூறி சிரிப்பது போன்று டீசர் முடிகிறது.


1 நிமிடம் 30 வினாடிகள் இந்த டிரைலர் ஓடுகிறது. கிராபிக்ஸ் காட்சிகளே பெரும்பாலும் டீசரை ஆக்கிரமித்துள்ளன. இந்த டீசர் தியேட்டர்களில் 3டி வடிவில் திரையிடப்பட்டது. யுடியூப்பில் 2டியில் வெளியானது.


படம் பற்றி டீசரிலிருந்து தெரிவது என்ன?


முதல் பாகத்தில் வந்த விஞ்ஞானி வசீகரனும், சிட்டி ரோபோவும் இந்த பாகத்தின் ஹீரோக்கள். அவர்கள், பயங்கர வில்லனான அக்ஷய்குமாருடன் மோதி அழிவில் இருந்து உலகை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை .

படத்தில் இன்று மக்கள் கையில் இருக்கும் செல்போன் முக்கிய பங்கு வகிக்கிறது. செல்போன்களில் உள்ள பவரைக் கொண்டே வில்லன் அக்சய் குமார் ரோபோக்களை உருவாக்குகிறார். இறுதியில் அவர் சிட்டியையும் வில்லனாக மாற்றுகிறார் படத்தின் டைட்டில் கூட செல்போன்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.


Advertisement
வியாழக்கிழமைக்கு மாறும் வெளியீடுகள்வியாழக்கிழமைக்கு மாறும் ... அறம் இயக்குனரின் அடுத்த படம் : ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்கள் அறம் இயக்குனரின் அடுத்த படம் : ஜெய், ...


வாசகர் கருத்து (2)

Kailash - Chennai,இந்தியா
18 செப், 2018 - 00:44 Report Abuse
Kailash அதாவது முந்தய படத்தில் processor ஸ்பீட் மெமரி சொல்லுவார். இப்போது ஸ்மார்ட் போனில் அக்டோ core processor வரை வந்துவிட்டது வில்லன் அத்தனை செல்போன் processors ஒன்றிணைத்து அதை கட்டுப்படுத்தி இயக்கி சூப்பர் பவர் கிடைக்கிறது. சிறு பறவை வடிவ எந்திரம் இந்த போன்களை வைத்து பெரிய உருவமாக்கி தாக்குவது போல இருக்கலாம் ஆனால் செல்போன் திரை மிக மெல்லியது கீழே விழுந்தாலே நொறுங்கி விடும் அப்புறம் எப்படி தாக்குவது போல வைத்துள்ளனர்? முதலிலே காண்பிக்க படும் செல்போன் டவரில் நடுவில் தூக்கில் ஒருவர் தொங்கி கொண்டு இருக்கிறார் நன்றாக கவனிக்கவும்... ஒரு வேளை செல்போன் வைத்து கண்டுபிடிக்கும் இயந்திரத்தை மக்கள் புறக்கணித்து கிண்டலடித்து அவர் அதே செல்போனில் தற்கொலை செய்ய முற்பட்டு பறவைகள் அந்த உடலை குதறி அந்த அந்த விஞ்ஞானி பறவை எந்திரமாக மாறிவிடுகிறதோ... ஸ்பைடர் மேன் முதல் பாகத்தில் அப்படிதான் Willem Dafoe கதாபாத்திரமும் அப்படியே இருக்கும் அவரே புறக்கணிக்கப்படும் அந்த இயந்திரமாக மாறி பழிவாங்குவார்.. ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பா படம் மொக்கையாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது என்று கருதுகிறேன்........
Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
17 செப், 2018 - 15:46 Report Abuse
இந்தியன் kumar பிரம்மாண்டத்தின் மறுபெயர் ௨.0
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  Tamil New Film Kalavani Mappillai
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in