‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி வருகிறது விஸ்வாசம். அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இப்படத்தில் நான்கு பாடல்கள் உள்ளதாம். அதில் ஒரு அதிரடியான ஓப்பனிங்கும் பாடலும் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலுக்கான டியூனை ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த அஜித்திடம் நேரில் சென்று போட்டு காண்பித்து ஒப்புதல் பெற்றிருக்கிறார் இசையமைப்பாளர் இமான்.
வித்தியாசமான இசைக்கருவிகளை பயன்படுத்தி சூப்பர் ஹிட் ஓப்பனிங் பாடலாக உருவாக்கியிருக்கிறாராம். அதோடு ஒரு மென்மையான மெலோடி, டூயட் பாடலும் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கிறதாம்.