ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த பிச்சைமணி என்பவரின் மகள் கனிமொழி. இவர் அதிக மதிப்பெண்கள் எடுத்து மெரிட் அடிப்படையில் மருத்துவ கல்லூரில் சேர்ந்து படித்து வந்தார். சிறிய குடிசை வீட்டில் தான் இவர் வாழ்ந்து வருகிறார். 4ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு அந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை கட்ட இயலவில்லை. இதனால் படிப்பை விட்டுவிட்டு பெற்றோர்களுடன் இணைந்து கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்த செய்தி வெளியானதை அறிந்த கமல், அந்த மாணவியை தனது அலுவலகத்துக்கு அழைத்து வந்து 4ம் ஆண்டுக்கான கல்வி கட்டணமான 5 லட்சத்தை வழங்கினார். அதோடு கனிமொழியின் முழு படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டார். இதனை கமல் தனது அண்ணன் சந்திரஹாசன் பெயரில் தொடங்கி உள்ள அறக்கட்டளை மூலம் செய்திருக்கிறார்.