தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளாவைச் சேர்ந்தவர் காயத்ரி கிருஷ்ணா. தமிழில், ஜோக்கர், மேற்கு தொடர்ச்சி மலை படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சமுத்திரகனி ஜோடியாக சங்கத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த மேற்கு தொடர்ச்சிமலை படத்தில் காயத்ரியின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் காயத்திரி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். காயத்ரியின் குடும்ப நண்பரும், கன்னட சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருப்பவருமான ஜீவன் ராஜன் என்பவரை திருமணம் செய்கிறார்.
இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள். இப்போது இருவீட்டார் ஒப்புதலுடன் திருணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்தது. திருமண தேதி இன்னும் முடிவாக இல்லை. இந்த ஆண்டின் இறுதியில் திருமணம் இருக்கும் என்று குடும்பத்தார் தெரிவிக்கிறார்கள்.