டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் தீம் மியுசிக் என்பதை 'பில்லா' படத்தின் மூலம் இன்றைய தலைமுறைக்கு பரப்பியவர் யுவன் ஷங்கர் ராஜா. அந்தப் படத்தில் அஜித்திற்காக அவர் அமைத்த தீம் மியூசிக், அடுத்து 'மங்காத்தா' படத்திற்காக அவர் அமைத்த தீம் மியூசிக் ஆகியவை இப்போதும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.
'ஆரம்பம்' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்திற்கு யுவன் இசையமைக்கவில்லை. அடுத்து 'தீரன் அதிகாரம் ஒன்று' வினோத் இயக்க, அஜித் நாயகனாக நடிக்க உள்ள 'பின்க்' படத்தின் ரீமேக்கிற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித், யுவன் கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்களும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றவை. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைவது இருவரது ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாகவே இருக்கும்.