அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ரஜினி தற்போது நடித்து வரும் படம் பேட்ட. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது லக்னோவில் நடந்து வருகிறது.
படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் லக்னோ படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டு நடித்தபோது எடுத்த புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. சிகப்பு சட்டை, கருப்பு ஜீன்ஸ், தோளில் ஒரு மப்ளர் என பர்ஸ்ட் லுக்கில் இருப்பது போன்ற தோற்றத்தில் ரஜினி இருக்கிறார். கண்ணுக்கு கீழே சிறிய அளவிலான தழும்பும் உள்ளது. இந்த படங்கள் நேற்று வைரலாக பரவியது.
இந்தப் படங்கள் எப்படி வெளியானது என்று தயாரிப்பு தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது என்ற தகவல் வெளிவந்தாலும். படத்தின் புரமோசனுக்காக புரமோசன் டீம் தான் இந்த படங்களை லீக் செய்துள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.