இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சென்னையை அடுத்து ரெட்ஹில்ஸில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ஏ.ஆர்.கார்டனில் ஒய்.எம் ஸ்டுடியோ என்ற படப்பிடிப்பு தளம் உள்ளது. இதில் கிரீன்மேட் ஸ்டுடியோ மற்றும் 2 பெரிய படப்பிடிப்பு தளங்களும் உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் பாடல் காட்சிதான் முதன்முதலாக இங்கு படமாக்கப்பட்டது. ரஜினி-எமிஜாக்சன் இணைந்து நான்கு நாட்கள் அந்த பாடல் காட்சியில் நடித்தனர்.
அதையடுத்து தற்போது மீண்டும் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் படப்பிடிப்பும் அதே ஒய்.எம். ஸ்டுடியோவில் சமீபத்தில் சில தினங்களாக நடைபெற்றுள்ளது. நவீன தொழில்நுட்பம் அடிப்படையில் இந்த ஸ்டுடியோவை ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கியிருப்பதால் கோலிவுட் இயக்குனர்களின் கவனம் இப்போது ஒய்.எம். ஸ்டுடியோ பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறது.