ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விதார்த், சாந்தினி தமிழரசன் நடித்துள்ள படம் வண்டி. ஜான் விஜய் வில்லனாக நடித்துள்ளார். ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரித்துள்ளார். கடந்த ஆண்டே தயாராவிட்ட இந்தப் படம், வெளியாவதற்கு திணறிக் கொண்டிருந்தது. தற்போது இந்தப் படத்தை எஸ்.போக்கஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.சரவணன் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமத்தை வாங்கி வெளியிடுகிறார்.
என் நிறுவனத்தின் பிரதான நோக்கமே தரமான படங்களை தொடர்ந்து வெளியிடுவது தான். "வண்டி" படத்தின் விநியோக உரிமையை பெற்று, படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் மும்முரமாக உள்ளேன். ஒரு தரமான படத்துக்கு உற்ற துணையாக புரொமோஷன் மற்றும் மார்க்கெட்டிங் அமைந்து விட்டால் அந்த படத்தின் வெற்றிக்கு யாரும் தடை விதிக்க முடியாது. அந்த வகையில் சிறந்த கதை அமைப்பு, காட்சி அமைப்பு, எங்களது நிறுவனத்தின் விளம்பரம் ஆகிய அனைத்தையும் கொண்ட "வண்டி" வெற்றி பாதையில் பயணிக்கும் என்கிறார் எம் சரவணன்.