அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
கேரளாவில் ஏற்பட்ட கடும் மழை வெள்ள பாதிப்பு காரணமாக இந்த வருடம் டிசம்பரில் நடைபெறவிருந்த 23-வது கேரள சர்வதேச திரைப்பட விழா (IFFK) ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு அறிவித்தது. இந்த விழாவை நடத்துவதற்கு ஆகும் செலவை வெள்ள நிவாரண பணிகளுக்கு செலவிட முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது..
இதற்கு பிரபல இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், இயக்குனர் டாக்டர் பைஜூ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இது முட்டாள் தனமான முடிவு என கூறியுள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன்.
"இந்தவிழாவில் கலந்து கொள்ளும் திரைப்படங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டன. இப்போது திடீரென விழாவை நடத்தாமல் நிறுத்தினால் இந்தப்படங்களால் இனி அடுத்த வருடம் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள முடியாது. இது படைப்பாளிகளின் உரிமையை பறிக்கும் செயல். விழாவை ரத்து செய்வதற்கு பதிலாக, குறைந்த செலவில் விழாவை நடத்த அரசு முயற்சிக்க வேண்டும்" என கூறியுள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன்.