'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரளாவில் சமீபத்தில் பெய்த மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளமும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மட்டுமல்ல, திரையுலகினரையும் வெகுவாக பாதித்துள்ளது. கடந்த இருபது நாட்களாக படங்கள் வெளியாகவில்லை. படப்பிடிப்புகள் கூட சமீப நாட்களாகத் தான் துவங்கியுள்ளன. இதனால் ஏற்கனவே ரிலீஸ் தேதியை அறிவித்திருந்த, படங்கள் எல்லாம் தங்களது ரிலீஸ் தேதியை மாற்றி வருகின்றன.
மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகிவரும் ஓடியன் படம் அக்-11ல் ரிலீசாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேற்கூறிய காரணங்களால், படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகள் தாமதமாகவே, ரிலீஸ் தேதியை டிச-14க்கு மாற்றி வைத்து அறிவித்துள்ளது படத்தை தயாரித்துவரும் ஆசீர்வாத சினிமாஸ் நிறுவனம்.
அதுமட்டுமல்ல இதே நிறுவனம் தான் பிருத்விராஜின் டைரக்சனில் மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தையும் தயாரித்து வருகிறது. இந்தப்படம் வரும் 2019 மார்ச்-28ஆம் தேதி ரிலீசாகும் என்பதையும் இப்போதே அறிவித்து விட்டது.