பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடும் மழை, வெள்ளம் காரணமாக மலையாள திரையுலகில் கடந்த 25 நாட்களில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இந்தநிலையில் வெள்ள பாதிப்பிற்கு பின் நிலைமை சற்றே சுமுகமாகி வரும் சூழலில் முதல் படமாக பிருத்விராஜ் நடித்துள்ள ரணம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தப்படத்தில் இஷா தல்வார் கதாநாயாகியாக நடிக்க, நடிகர் ரகுமான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
நிர்மல் சஹாதேவ் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர், ஏற்கனவே பிருத்விராஜ் - நிவின்பாலி நடித்த இவிடே படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். நீண்ட நாட்கள் கழித்து பிருத்விராஜ் நடித்துள்ள ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளதாலும், முற்றிலும் வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது உண்மை.