ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
'காதலில் விழுந்தேன்' படத்தில் அறிமுகமானவர் சுனைனா. நாக்க முக்க என்ற பாடல் ஹிட்டானதால் காதலில் விழுந்தேன் படமும் ஹிட்டானது. 'காதலில் விழுந்தேன்' படத்தை தொடர்ந்து 'மாசிலாமணி' படத்திலும் நகுல் - சுனைனா இருவரும் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவருமே பல படங்களில் நடித்தும் இருவருக்கும் பெரிய வளர்ச்சி இல்லை.
இந்நிலையில் இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்து நடிக்ககிறார்கள். அறிமுக இயக்குனர் சச்சின் தேவ் இயக்குகிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தில் நகுல், சுனைனாவுடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இப்படம் அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவிருக்கிறது.
நகுல் நடிப்பில் உருவான 'செய்' படம் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. சுனைனாவோ எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.