தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சரியாக பத்து வருடங்களுக்கு முன் கலி ஊஞ்சல் என்ற மலையாளப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மஞ்சிமா மோகன், அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
அப்படத்தில் நடித்தபோதே அவருக்கு ஏகப்பட்ட படங்கள் தேடி வந்தன. ஆனால் சரிவர படங்களை தேர்வு செய்யாததாலும், அடுத்தடுத்த படங்களின் தோல்வியாலும் தமிழில் முன்னணி நடிகையாக முடியவில்லை.
தற்போது கவுதம் கார்த்திக்குடன் 'தேவராட்டம்' என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் மஞ்சிமா மோகன். அடுத்ததாக, 'மைக்கேல்' என்ற ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தில் நிவின் பாலி ஹீரோ. ஏற்கெனவே இவர்கள் இருவரும் 'ஒரு வடக்கன் செல்பி' என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்துள்ள நிலையில் இப்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள்!
நிவின் பாலியுடன் மஞ்சிமா மோகன் இணைந்து நடிக்கும் மைக்கேல் படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறவிருக்கிறது. இந்த படத்தை இயக்கும் ஹனீஃப் அடேனி ஏற்கெனவே மம்முட்டி நடிப்பில் வெளியான 'தி கிரேட் பாதர்' என்ற படத்தை இயக்கியவர். அதுமட்டுமல்ல, மம்முட்டி நடித்த 'ஆப்ரஹாமிண்டெ சந்ததிகள்' என்ற படத்தின் கதையை எழுதிய வரும் இவர் தான்.