மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
காமராஜர் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்த அ.பாலகிருஷ்ணன், தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையையும் திரைப்படமாக தயாரித்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
டிரைலரை முன்னாள் அமைச்சர் ஹண்டே வெளியிட, சைதை துரைசாமி பெற்றுக்கொண்டார். விழாவில் சைதை துரைசாமி பேசியதாவது: காந்தி, காமராஜர் பெயர்களில் படங்கள் வந்துள்ளன. எம்.ஜி.ஆர். வாழ்க்கையும் படமாவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு மனிதனை கடவுளாக கருத எத்தனை பண்புகள் தேவையோ அத்தனை பண்புகளும் எம்.ஜி.ஆரிடம் இருந்தன. அவர் ஒரு அவதாரம். மனித நேயத்தில் உச்சம் தொட்டவர். எம்.ஜி.ஆர் வாழ்க்கையை நிகழ்கால இளைஞர்களும், அரசியல்வாதிகளும் இந்த படம் மூலம் அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
இந்த விழாவில் கவிஞர் பூவை செங்குட்டுவன், நடிகை லதா, இயக்குனர் ஆதவன், எம்.ஜி.ஆராக நடித்துள்ள சதீஷ், பாலாசிங், மாஸ்டர் அத்வைத் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.