Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்கார் படத்தில் முதல்வரின் மகளாக நடிக்கும் வரலட்சுமி

04 செப், 2018 - 13:01 IST
எழுத்தின் அளவு:
Varalaxmi-acting-as-CMs-daughter-in-Sarkar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம்- 'சர்கார்'. கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இயக்கி வரும் இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

'பைரவா' படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.

சென்னை, கோல்கட்டா, லாஸ்வேகாஸ் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இருதினங்களுக்கு முன் அதாவது, செப்டம்பர் 2 அன்று படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தனியார் கல்லூரியில் நடைபெற்ற கடைசிநாள் படப்பிடிப்பில் வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டார். அன்றைய தினம் விஜய் கலந்து கொள்ளவில்லை.

சர்கார் படத்தில் முதலமைச்சராக நடிக்கும் பழ.கருப்பையாவின் மகளாக நடிக்கிறார் வரலட்சுமி. துணை முதல்வரான ராதாரவி, விபத்தை ஏற்படுத்தி பழ.கருப்பையாவை கொலை செய்கிறார். தன் தந்தையின் மரணத்துக்குப் பின்னால் உள்ள மர்மத்தைத் தேடி அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி.

அவருக்கு ஆதரவாக விஜய்யும் அமெரிக்காவிலிருந்து வருகிறார். ராதாராவிக்கு எதிராக களத்தில் இறங்கி தேர்தலில் வெற்றி பெறுகிறார். இந்தக்காட்சிகள் எல்லாம் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்ட நிலையில் வரலட்சுமி சம்மந்தப்பட்ட காட்சிகள் பாக்கி இருந்தது. அதை கடைசிநாளில் படமாக்கியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயன் மீது சினம்சிவகார்த்திகேயன் மீது சினம் அசர வைத்த ஜி.வி.பிரகாஷ்குமார் அசர வைத்த ஜி.வி.பிரகாஷ்குமார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

tamilselvan - chennai,இந்தியா
05 செப், 2018 - 18:25 Report Abuse
tamilselvan முருகதாஸ் அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிருன விளம்பரம் செய்து கொண்டுயிருக்ததிரு உங்கள் திரைப்படதுறையில் ஊழல் இருக்கிறது அதை பற்றி படம் எடுங்கள் பார்போம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ispet rajavum idhaya raniyum
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in