பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். அரசியல் கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தில் வரலட்சுமி வில்லியாக நடித்திருப்பதாக செய்திகள் வெளியானபோதும் அவர் அதை மறுத்துள்ளார். இந்த படத்திற்காக முதன்முறையாக வித்தியாசமான ஒரு கெட்டப்பில் நடித்துள்ளேன். ஆனால் அதை சஸ்பென்சாக வைத்திருந்தால் தான் சுவராஸ்யமாக இருக்கும் என்று கூறி வருகிறார்.
சர்கார் படத்தின் ஸ்பாட்டில் விஜய் குடை பிடித்தபடி நின்று கொண்டிருந்த ஒரு போட்டோவை அவரது அனுமதியுடன் ஏற்கனவே தனது டுவிட்டரில் வெளியிட்டிருந்தார் வரலட்சுமி. அதையடுத்து நேற்றோடு இப்படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. அதையும் தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ள வரலட்சுமி, படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.