இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அர்ஜூன் ரெட்டி பட நாயகனான விஜய் தேவரகொண்டா, சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான நடிகையர் திலகம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. தமிழ்நாட்டிலும் அதிக கல்லா கட்டியது.
இந்தநிலையில், ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள நோட்டா என்ற தமிழ்ப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. ஆனந்த் சங்கர் இயக்கும் இந்த படத்தில் அவருடன் சத்யராஜ், நாசர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படம் தெலுங்கிலும் வெளியாகிறது.
இந்த நோட்டா அக்டோபர் 4-ந்தேதி வெளியாகயிருப்பதால் இன்று முதல் ஐதராபாத்தில் இப்படத்தின் பிரமோஷனை தொடங்குகிறார் விஜய் தேவரகொண்டா. அதன்பிறகு தமிழ்நாட்டிற்கும் வந்து புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாராம்.