பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபுதேவாவின் இரண்டாவது இன்னிங்ஸ் பிரமாதமாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த வருடம் மட்டுமே பிரபுதேவா நடிப்பில் குலோபகாவலி, மெர்க்குரி, லக்ஷ்மி என மூன்று படங்கள் வெளியாகி இருக்கின்றன.
யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, பொன்மாணிக்கவேல், காமோஷி என அவர் நடிப்பில் மேலும் சில படங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. தேவி-2 படமும் அவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், பிரபுதேவா நடிப்பில் தேள் என்ற புதிய படம் துவங்கியுள்ளது. தூத்துக்குடி, மதுரைச்சம்பவம் படங்களில் ஹீரோவாக நடித்து பிறகு க்ளிக் ஆகாமல்போன முன்னாள் டான்ஸ் மாஸ்டர் ஹரிகுமார் என்பவர் தேள் படத்தை இயக்குகிறார்.
தேவி படத்துக்குப் பிறகு பிரபுதேவா நடித்த குலோபகாவலி, மெர்க்குரி ஆகிய இரண்டு படங்களும் படு தோல்வி. விஜய் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான லக்ஷ்மி படமும் கமர்ஷியலாக தோல்வியடைந்துள்ளது. அப்படியும் பிரபுதேவாவை வைத்து புதிய படங்கள் தொடங்கப்படுவது ஏன்? அவர் நடித்த படங்களின் ஹிந்தி சாட்டிலைட் ரைட்ஸ் சுமார் 3 கோடிக்கு விலை போகிறதாம். அதனால் அவருக்கு மவுசு என்கிறார்கள்.