'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு 90, 2000 ஆண்டுகளில் படங்களை இயக்கிய இயக்குனர்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்காது. சில இயக்குனர்கள் சிறந்த படங்களைக் கொடுத்தும் சில பல காரணங்களால் நடுவில் காணாமல் போயிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் கே.எஸ். அதியமான்.
1995ம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளிவந்த 'தொட்டா சிணுங்கி' படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கார்த்திக், ரகுவரன், ரேவதி, தேவயானி நடித்த அந்தப் படம்தான் பின்னர் ஷாரூக்கான், சல்மான் கான், மாதுரி தீட்சித் ஆகியோர் நடிக்க அவரது இயக்கத்திலேயே 'ஹம் தும்ஹாரே ஹைன் சனம்' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது.
பின்னர் மீண்டும் தமிழில் 'பிரியசகி, தூண்டில்' ஆகிய படங்களை இயக்கிய அதியமான சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்க வந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகி நடந்து வருகிறதாம். நாயகியாக ஆனந்தி நடிக்க, இமான் இசையமைக்கிறார். ஒரு த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது என்கிறார்கள்.