பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்திருப்பவர் தனுஷ். தற்போது வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2 என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வட சென்னை படம் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், "வட சென்னை பற்றி விஷயங்களை பலரும் கேட்கிறார்கள். கருத்துள்ள ஒரு பாடலை நகைச்சுவையாக உருவாக்கி வருகிறோம். ஆல்பம் முடியும் தருவாயில் உள்ளது. இசைக்கலைஞர் தனுஷூம் சிறப்பான ஒரு விஷயத்தை செய்துள்ளார். விரைவில் பாடல் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணனின் டுவிட், தனுஷூம் இப்படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.