மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ளார். ஜனகராஜ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த மேனன் இசை அமைத்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஒளிப்பதிவாளர் சி.பிரேம்குமார் இயக்கி உள்ளார்.
இந்தப்படம் 1996ம் ஆண்டு பள்ளி மாணவ மாணவிகளாக இருந்தபோது காதலித்த விஜய்சேதுபதியும், த்ரிஷாவும், 2018ல் சந்தித்து கொள்கிறார்கள். விஜய் சேதுபதி ஒரு புகைப்பட கலைஞர். அவர்கள் சந்திப்பில் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார். அப்போது அவர்கள் வாழ்க்கையை திருப்பி போட்ட ஒரு சம்பவம் பற்றி இருவருக்குமே தெரிய வருகிறது.
அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இதில் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் பள்ளி மாணவ மாணவிகளாக நடித்திருப்பதையும், அந்த சம்பவத்துக்கு காரணமான ஜனகராஜ் கேரக்டரையும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் வாங்கி வெளியிடுகிறார்.