தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபலமான இயக்குநர் அனுராக் காஷ்யாப். இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் நடிகராக, அதுவும் சைக்கோ வில்லனாக களமிறங்கி உள்ளார். இவரின் நடிப்பிற்கு பரவலான பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில் நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்க விரும்புவதாக அனுராக் காஷ்யாப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
தனுஷின் ஆடுகளம் படம் வெளியானபோது அவரது நடிப்பை பாராட்டியவர் அனுராக். இமைக்கா நொடிகள் படத்தில் விஜய் சேதுபதியும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அவரது நடிப்பையும், பிற படங்களில் அவரது நடிப்பை பார்த்து வியந்திருப்பவர் இருவரையும் இயக்கும் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அனுராக்கின் ஆசையை தனுஷ், விஜய் சேதுபதி நிறைவேற்றுவார்களா.?, பொறுத்திருந்து பார்ப்போம்...!