திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரு மகள்கள். மூத்தவர் ஜான்வி. இளையவர் குஷி. ஜான்வி, ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும்போதே, இந்தி படங்களில் நடிக்கத் துவங்கி விட்டார். அவர் நடிப்பில் உருவான இந்தி படம் தடக், சமீபத்தில் வெளியானது. வெற்றியும் பெற்றது. இதனால், அவருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.
தமிழ் படங்களிலும் அவரை நடிக்கச் சொல்லி, பலரும் வற்புறுத்துகின்றனர். இந்நிலையில், ஜான்வியின் சகோதரி குஷியையும் படங்களில் நடிக்க வைக்க முயற்சிக்கின்றனர். நடிகை ஜான்விக்கு உதவியாக இருந்து வரும் குஷியை, வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று வருகிறார் ஜான்வி.
இந்நிலையில், அவரை நடிக்க வைக்க, ஜான்வியிடம் பலரும் நச்சரிக்க, குஷியை நடிப்புலகிற்கு அழைத்து வர, ஜான்வி முயற்சித்துக் கொண்டிருக்கிறார். குஷி, ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், நடிகை ஸ்ரீதேவியின் இரு வாரிசுகளும், சினிமாவையே வாழ்க்கையாக்கிக் கொள்வர்.
சமீபத்தில் மும்பையில் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடந்தது. அதில் நடிகை ஜான்வியும் அவரது சகோதரி குஷியும் ஒன்றாக கலந்து கொள்ள, அதை பார்த்த பின், இயக்குநர்கள் பலரும், ஜான்வி மூலம் குஷியை நடிக்க வைக்க தீவிரமாக முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.