வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடன இயக்குனராக இருந்து நடிகர் ஆனவர் ஹரிகுமார். தூத்துக்குடி படத்தில் அறிமுகமான அவர் திருத்தம், மதுரை சம்பவம், போடி நாயக்கனூர் கணேசன் படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள சங்கராபுரம், மதுரை மணிக்குறவன் படங்கள் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் ஹரிகுமார் படம் இயக்குகிறார். படத்தின் டைட்டில் தேள். இதில் ஹரிகுமாரின் குருநாதர் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார். சி.சத்யா இசை அமைக்கிறார். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. படம் பற்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியதாவது:
ஒரு புகழ் வாய்ந்த நடன இயக்குநரை இன்னொரு நடன இயக்குனர் இயக்குவது வெறும் யதேச்சையான நிகழ்வு மட்டும் அல்ல. நடனம் என்பது உணர்வுகளின் ஒரு முக்கியமான பிரிவு என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். நடனத்தில் அனுபவமிக்க இந்த இருவரும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் உணர்வுடன் கூடிய ஒரு ஆக்ஷன் படத்தை கொடுக்க இருக்கிறார்கள். "தேள்" நிச்சயமாக எங்கள் நிறுவனத்துக்கு பெருமை சேர்க்கும். சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்திருக்கிறோம். கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. என்கிறார் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா.