மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
2007ம் ஆண்டு தெலுங்கில் நானி, நிவேதா தாமஸ், ஆதி நடிப்பில் வெளியான படம் நின்னுகோரி. முக்கோண காதல் கதையில் உருவான இந்த படம் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் வேலைகள் தொடங்கியிருக்கிறது.
மேலும், இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நானி நடித்த வேடத்தில் வைபவ் ஒப்பந்தமாகியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து அப்படத்தில் நிவேதா தாமஸ், ஆதி நடித்த வேடங்களில் நடிப்பதற்கு நடிகர் நடிகை பரிசீலனை நடந்து வருகிறது.
இதற்கிடையே, பாபநாசம் படத்திற்குப்பிறகு தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வரும் நிவேதா தாமஸ் இந்த படம் மூலம் மீண்டும் தமிழில் நடிப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.