பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
முதன்முறையாக சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் படம் என்ஜிகே. சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், ஜெகபதி பாபு நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இப்படம் ஆரம்பிக்கும் போதே தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்தார்கள். படப்பிடிப்பும் நடந்து வந்தது. இடையில் செல்வராகவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்டதால் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது என்று சொல்லப்பட்டது. இருப்பினும் படப்பிடிப்பை விரைந்து முடிக்க எண்ணினர்.
இந்நிலையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது என அறிவித்துள்ளது. ரசிகர்கள் கொண்டாடும் விதத்திலும் படம் உருவாகி வருகிறது. பணிகளை முடிக்க சிறிது காலம் தேவைப்படுவதால், தீபாவளிக்கு பின்னர் வெளியாகும். அதற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை மிகவும் ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. ஏற்கனவே அஜித்தின் விஸ்வாசம் தீபாவளி ரேஸில் விலகிய நிலையில் இப்போது என்ஜிகே-வும் விலகி உள்ளது. இதன்மூலம் விஜய்யின் சர்கார் படம் சிங்கிளாக களமிறங்குகிறது.