சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்ட்மென்ட் சி.வி.குமார் அடுத்து தயாரிக்கும் படம் ஜாங்கோ. அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுபட்டி படதில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோ கார்த்திகேயன் இயக்குகிறார்.
புதுமுகம் சதீஷ் கதாநாயகனாகவும், டப்மாஸ் புகழ் மிருணாளினி கதாநாயகியாகவும் அறிமுகமாககிறார்கள். இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், ஆர்ஜே.ரமேஷ், துளசி, சந்தான பாரதி உள்பட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் பிரசன்னா இசை அமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் நேற்று துவங்கியது. ஈரம் அறிவழகன் கேமராவை இயக்கி சிஷ்யனின் பணியை தொடங்கி வைத்தார். இது காமெடி கலந்த த்ரில்லர் கதை. ஒரே கட்டமாக படத்தை முடித்து திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.