நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் சீமராஜா. சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன், யோகி பாபு நடிக்கும் படம் 'சீமராஜா' படம் விநாயக சதுர்த்தி தொடர் விடுமுறையை குறிவைத்து செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் வேகமெடுத்துள்ள நிலையில் 'சீமராஜா' குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, 'சீமராஜா' படம் வழக்கம்போல பல வெளிநாடுகளில் வெளியாகவிருப்பதோடு போலந்த் நாட்டிலும் வெளியாகவிருக்கிறது.
சூர்யா, ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் மட்டுமே இதுவரை போலந்தில் வெளியாகியுள்ளன. இப்போது முதன் முதலாக சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' படம் அங்கு வெளியாகவிருகிறது.
'7th Sense Cinematics' என்ற பட நிறுவனம் 'சீமராஜா'வை போலந்தில் வெளியிடுகிறது. இது சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மற்றுமொரு கவுரவம்.