இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன், யோகி பாபு நடிக்கும் 'சீமராஜா' படம் விநாயக சதுர்த்தி விடுமுறையையொட்டி அடுத்த மாதம் 13-ஆம் தேதியன்று வெளியாகிறது.
நேற்றைய முன் தினம் அதாவது ஆகஸ்ட் 28 அன்று இப்படம் தணிக்கைக்குழுவினர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சீமராஜா படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் அனைவரும் பார்க்கக்கூடிய படத்திற்கான 'U' சர்டிபிகேட்டை 'சீமராஜா' படத்துக்கு வழங்கியுள்ளனர்.
5 பேர் அடங்கிய தணிக்கைக்குழுவில் 3 பெண்கள் இடம்பெற்றிருந்தனர். 3 பெண்களுமே சீமராஜாவில் ஆபாசம் வன்முறை இல்லை. பேமிலி எண்டர்டெய்னராக இருக்கிறது என்று பாராட்டியுள்ளனர். 'U' சர்டிபிகேட் வழங்கப்பட்டதனால் 'சீமராஜா' படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தணிக்கை சான்றிதழ் கிடைத்ததை தொடர்ந்து நாளை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி புரமோஷனை தொடங்க உள்ளனர்.