ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
தமிழ்த் திரையுலகில் நயன்தாராவுக்கென இருக்கும் தனி இடம் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர் நடித்து வரும் படங்கள் ஓடினாலும், ஓடாவிட்டாலும் அவர் புகழின் வெளிச்சத்தில்தான் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார்.
நயன்தாரா நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த முதல் தமிழ்ப் படமாக 'கோலமாவு கோகிலா' படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அவர் நாயகியாக நடித்துள்ள 'இமைக்கா நொடிகள்' படம் நாளை வெளியாக உள்ளது.
ஒரு பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நாயகனாக அதர்வா நடித்துள்ளார். ஆனாலும், படத்தை அவருக்காகப் பார்க்கும் ரசிகர்களைவிட நயன்தாராவிற்காகப் பார்க்கும் ரசிகர்கள்தான் அதிகம் இருப்பார்கள். அதர்வா நடித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்த 'செம போத ஆகாதே' படம் வந்த சுவடே இல்லாமல் போனது. அவர் நடித்து அடுத்தடுத்து மேலும் சில படங்கள் வெளிவர உள்ளன.
'இமைக்கா நொடிகள்' படம் வெற்றி பெற்றால்தான் அந்தப் படங்களின் வியாபாரமும் சிறப்பாக நடக்கும். அதனால், நாளை வெளியாக உள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தை நயன்தாரா அவருடைய வெற்றி ராசியால் காப்பாற்றினால் தான் அதர்வாவுக்கு அடுத்தடுத்து படங்களுக்கும் வரவேற்பு இருக்கும்.